ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்...

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒரு முறையா இரு முறையா பல முறை
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர்ப் பாதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

தோல்வி நிலையென நினைத்தால்..

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...


விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

அலைபாயுதே கண்ணா....

அலைபாயுதே கண்ணா....
அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா

அலைபாயுதே....

வேணு கானமதில் அலைபா
என் மனம் மிக அலைபாயுதே
மோகன வேணு கானமதில் அலைபாயுதே

கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே...
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....


கண்ணா......கண்ணா..


நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர
நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர



என் மனம் அலை பாயுதே.
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....

கண்ணா......கண்ணா..



தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே

உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே


கனிந்த உன் வேணுகானம் ..ஆஅ...ஆஅ..
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே

கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா


ஒரு தனித்த வனத்தில் அணைத்து
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ


இது தகுகோ.. இது முறையோ..
இது தருமம் தானோ....

குழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குழல்கள் போலவே
மனது வேதனை மிகவூது

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக
அலைபாயுதே.
உன் ஆனந்த மோகன வேணுகாணமதில்
அலைபாயுதே.

கண்ணா.. கண்ணா.. கண்ணா...

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

கண்ணதாசன் கவிதை



பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!